மாணவி ஒருவர் நாளை நடக்கவிருக்கும் நீட் தேர்வு எழுதவுள்ள நிலையில் தற்கொலை செய்து கொண்டார்.

அரியலூரில் ரயில்வே நகரைச் சேர்ந்த ஒரு மாணவி, 12ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 430 மதிப்பெண்கள் பெற்றிருந்தார். மருத்துவ படிப்பிற்காக நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த அவர், தோல்வி பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மாணவியின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


