மிதாலி ராஜ் ஓய்வு!

Filed under: விளையாட்டு |

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மிதாலி ராஜ் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட்டில் தலைசிறந்த கேப்டனாக விளங்கியவர் மிதாலி ராஜ். தமிழ் நாட்டை பிறப்பிடமாக கொண்டவர். இதுவரை 12 டெஸ்ட், 89-டி-20, 232 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். தனது 23 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்வில் பல்வேறு சாதனைகளைப் படைத்து பல வீராங்கனைகளுக்கு முன்னோடியாக இருக்கும் இவர், டெஸ்ட் போட்டியில் 699 ரன்களும், ஒரு நாள் போட்டிகளி 7,805 ரன்களும், டி-20 போட்டிகளில் 2364 ரன்களும் அடித்து, 8 சதங்கள் மற்றறும் 85 அரை சதங்களும் எடுத்துச் சாதனை புரிந்துள்ளார்.