மீண்டும் இணையும் கமலஹாசன் – உதயநிதி!

Filed under: சினிமா |

சமீபத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் “விக்ரம்“ திரைப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டது. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தற்போது கமல்ஹாசன் மற்றும் உதயநிதி மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உதயநிதி ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் இப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ராஜ்கமல் பிலிம்ஸின் 54வது தயாரிப்பு இத்திரைப்படம். இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் இயக்குநர்கள் உட்பட தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.