மீண்டும் துருக்கியில் நிலநடுக்கம்!

Filed under: உலகம் |

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுமார் 47 ஆயிரம் பேர் பலியானதாக தகவல்கள் வெளியானது.

நேற்று திடீரென நள்ளிரவில் மீண்டும் அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாகவும் இந்த புதிய நிலநடுக்கத்திலும் உயிரிழப்பு ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. துருக்கி மற்றும் சிரியா எல்லையில் நேற்று இரவு 6.4 ரிக்டர் என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஏற்கனவே பிப்ரவரி 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிட இடிபாடுகளின் மீட்பு பணியை நடந்து வரும் நிலையில் தற்போது புதிய நில நடக்கும் ஏற்பட்டுள்ளது அந்நாட்டு மக்களை பெரும் அச்சத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இந்நிலையில் மீட்டு பணிகள் ஓரளவு முடிந்த நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டு மீண்டும் கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.