முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக்கொடை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருக்கோயில் பணியாளர்களுக்கு அகவிலைப்படியுடன் கருணைக்கொடை ரூபாய் 3000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இதுவரை திருக்கோயில் பணியாளர்களுக்கு கருணை கொடையாக ரூபாய் 2000 வழங்கப்பட்டு வந்த நிலையில் நடப்பாண்டு ஆயிரம் ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோயில் பணியாளர்கள் தமிழக அரசுக்கும் தமிழக முதலமைச்சருக்கும் தங்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.