முதலமைச்சர் ஸ்டாலின் மகிழ்ச்சி!

Filed under: அரசியல் |

முதலமைச்சர் ஸ்டாலின் நான் படித்த கல்லூரி இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த கல்லூரியாக தேர்வு செய்யப்பட்டதற்கு மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறியுள்ளார்.

கல்லூரிகளின் தரவரிசை பட்டியல் நேற்று வெளியானது. இதில் சென்னை மாநில கல்லூரி மூன்றாவது இடத்தை பெற்றது. சென்னை மாநிலக் கல்லூரியின் முன்னாள் மாணவரான தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுடன் தனது டுவிட்டரில் பக்கத்தில் “இந்தியாவிலேயே மூன்றாவது சிறந்த கல்லூரி என்ற பெருமையை நான் படித்த மாநில கல்லூரி பெற்று இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
மேலும் இந்த சாதனைக்கு காரணமான கல்லூரி நிர்வாகம், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்” என்று பதிவிட்டுள்ளார்.