முதல்வர் அம்மாவின் ‘தகதகாய’ வெற்றியும் காணாமல்போன தி.மு.க. – பி.ஜே.பி. கூட்டணி!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

DSC_74580பதினாறாவது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், தெளிவாக அமைந்துவிட்டது!
* இந்தியாவுக்கு மோடி!

* தமிழ்நாட்டுக்கு அம்மா!

முதல்வர் அம்மாவின் ‘தகதகாய’ வெற்றியின் காரணமாக, தி.மு.க.வும் காங்கிரசும் காணாமல் போய்விட்டன! தவிடுபொடியாகிவிட்டன!
* இந்திய அளவில் அ.தி.மு.க. 3&வது இடத்தைப் பிடித்துள்ளது! இரண்டாவது இடத்தை காங்கிரஸ் பெற்றுள்ளது! நான்காவது இடத்தை மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் பிடித்துள்ளது!
* முதல்வர் அம்மா, அசைக்க முடியாத அரசியல் சக்தியாக இந்திய அரசியல் அரங்கத்தில் பளிச்சிடுகிறார்!
* வரலாறுகளை உடைத்து & புதிய வரலாறுகளை படைப்பவர் முதல்வர் அம்மா என்பதற்கு, இந்தத் தேர்தல் முடிவுகளே சிறந்த எடுத்துக்காட்டு!
* கன்னியாகுமரியில் மதமும் தர்மபுரியில் ஜாதியும் இந்தத் தேர்தலில் கமுக்கமாக மையப்படுத்தப்பட்டது! அந்த இரண்டு தொகுதிகளில் மட்டும், ‘இரட்டை இலை’க்குப் பின்னடைவு!
* கூட்டணிக் கட்சிகளை துணைக்கு வைத்துக்கொள்ளாமல் & தனித்துப் போட்டியிட்டு 39ல் 37ஐ கைப்பற்றிய முதல்வர் அம்மா, தி.மு.க.வை தவிடுபொடியாக்கி ‘தகதகாய’ வெற்றியைப் பெற்றுள்ளார்!