முன்னணி நடிகர்களின் டீசர் தீபாவளி ரிலீஸ்!

Filed under: சினிமா |

முன்னணி நடிகர்களான சல்மான் கான் மற்றும் பிரபாஸ் ஆகிய இருவரின் திரைப்படங்களின் டீசரும் தீபாவளியன்று ரிலீசாக போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் படம் “ஆதி புரூஸ்.” இத்திரைப்படத்தை ஒம் ராவன் இயக்கி வருகிறார். ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகிவரும் படமான “ஆதி புரஸில்”, ராமனாக பிரபாஸும், கீர்த்தி சுரேஷ் சீதை கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். சயிப் அலிகான் ராவணன் வேடத்தில் நடிக்கிறார். ரூ.500 கோடி பட்ஜெடில் உருவாகியுள்ள இப்படம் விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்டுகிறது. இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது. இப்படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் கேட்டிருந்த நிலையில், ஆதிருபூஸின் டீஸர் வரும் தீபாவளி அன்று ரிலீசாகும் என தகவல்கள் வெளியாகிறது. இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 12ம் தேதி ரிலீசாகிறது.