பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளார். இச்சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சந்திப்பின் போது முன்னாள் பாமக தலைவர் ஜிகே மணி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். பாமக தலைவராக புதிதாக தேர்வு செய்யப்பட்டதையடுத்து முதல்வரை சந்தித்து அவரிடம் அன்புமணி வாழ்த்து பெற்றதாக கூறப்படுகிறது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாமக, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று இருப்பது கூட்டணி மாற்றத்திற்கான அறிகுறி என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.