தற்போது இந்திய அரசியலை இயக்கிக் கொண்டிருப்பது ஆம் ஆத்மி கட்சி என்கிறார்கள். சாதாரணக்குடிமகன் கட்சி என்பதன் தமிழாக்கம். இந்திய தேசிய கட்சியான பா.ஜ.க.வும், காங்கிரசும் இணைந்து பாரத நாட்டை சீரழித்த நிலையை கண்ட இந்திய மக்கள் அடித்த ஆப்பு ஆம் ஆத்மி கட்சி என்கிறார்கள். சாதி அரசியலும் மத அரசியலும் துணைக்கு அழைத்து இந்தியர்களை பிரித்து அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இந்தியர்களை பலிகொடுத்து ஆட்டம்போட்ட பா.ஜ.க., காங்கிரஸை தற்போது அதிரவைத்து ஆட்டம் காணுகிறதாம். ஆம் ஆத்மி கட்சி என்கிறார்கள். உண்மையில் ஆம் ஆத்மி கட்சி பாராளுமன்றத் தேர்தலில் அதிகம் எடுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளதாம்.
டெல்லி, அரியானா மாநிலங்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு கை கொடுக்கலாம். உத்திரபிரதேசத்தில் தற்போது ஜாட் இன மக்களும் முஸ்லிம் மக்களும் முலாயம்சிங் கட்சிக்கு எதிராக திரும்பியதால் சுமார் நான்கு அல்லது ஐந்து இடங்கள் பாராளுமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி உத்திரபிரதேசத்தில் வெற்றிபெறலாம் என்று கணிக்கப்படுகிறது. மேற்கு மாநிலங்களைத்தவிர பா.ஜ.க. மற்ற மாநிலங்களில் அதிக வளர்ச்சி பெறவில்லை என்பதே உண்மை. நரேந்திரமோடியை வைத்து கடைவிரித்தாலும், அதிகம் விலைபோகும் நிலையில் பா.ஜ.க. இல்லை என்பது கசப்பான உண்மை. காங்கிரஸ் காமெடி நடிகர் வடிவேலு கூறுவகூது போல் வரும். ஆனால் வராது என்ற நிலையில் உள்ளது.
ராகுல் காந்தி எப்படியாவது காங்கிரசை 180 இடங்களுக்குமேல் வெற்றிபெற பாராளுமன்றத் தேர்தலில் காயை நகர்த்துகிறார். ஒரு பக்கம் அவரது அன்னையின் உடல்நலக்குறைவு, மறுபக்கம் பெண் நண்பரின் காதல் முறிவு, இவரை வாட்டுவதாக தலைநகரில் வதந்திகள் பரவுகின்றன. இதனால் கலவரம் அடைந்த காங்கிரஸ் தற்போது பிரியங்கா காந்தியை இறக்கத்திட்டமிட்டுள்ளது. ஆனால் பிரியங்கா கணவரின் அரசியல் நடவடிக்கைகள் தற்போது பிரியங்காவின் ஆதரவைக் குறைத்துள்ளதாக கணிக்கப்படுகிறதாம். காங்கிரஸ் தன்னுடைய ஆட்சியில் நடந்த மெகா ஊழல்களை மறைக்க கண்டிப்பாக வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற தேர்தல் வெறியில் உள்ளது. அதற்கு தேர்தலுக்கு பிறகு கை கொடுப்பவர்களாக இடதுசாரி கட்சிகளை குறிப்பிடுகிறார்கள். கேரளாவில் சுமார் 10 இடங்களையும், மேற்கு வங்கத்தில் 15 இடங்களையும், தமிழகம் மற்ற மாநிலங்களிலும் 5 இடங்களிலும் வெற்றிபெறுவார்கள் என்ற கணிப்பு உள்ளதாம். காங்கிரஸ் தனது நிதியினை ஆட்சி அமைக்க வாரி இறைக்கத் தயாராக உள்ளதாகக் கிசுகிசுக்கிறார்கள்.
பீகாரின் நிதிஷ்குமார், லாலு யாதவ், பாஸ்வான், மகாராட்டிரத்தில் சரத்பவார், ராஜ்தாக்கரே, ஆந்திரத்தில் தெலுங்கானா மற்றும் ஜகன்மோகன் ரெட்டி & ஜார்க்கண்டில் சிபுசோரன், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி போன்ற கட்சிகளுடன் அனைத்து பேரங்களையும் பேச காங்கிரஸ் தயாராக உள்ளதாம். பா.ஜ.க. நரேந்திரமோடியை வைத்து பூச்சாண்டி காட்டினாலும், வெற்றிபெற்றபின் மோடி பிரதமராவது கடினம் என்ற கருத்து உலவுகிறது. அமெரிக்காவும், இலங்கையும் எந்த காரணம் கொண்டு தங்களுக்கு பிடிக்காத கட்சிகள் இந்தியாவில் அரியணை ஏற சம்மதிக்க மறுக்கிறார்களாம். இவர்களுடைய ஆசைகளை நிறைவேற்ற வரலாறு காணாத வகையில் பா.ஜ.க.வும், காங்கிரசும் கை கோர்க்கும் நிலை ஏற்படவும் தயார் செய்து வைத்துள்ளார்களாம்.
இலங்கை அதிபருக்கு பா.ஜ.க.வும், காங்கிரசும் நெருங்கிய நண்பர்கள், சீனா, பாகிஸ்தான் நாடுகளுக்கு எதிராக அரசியல் நாடகமாடி, அமெரிக்கா இலங்கை நட்புறவை விரும்புகிறார்களாம். அதனால் இந்தியர்களை பலி கொடுத்து குறிப்பாக தமிழர்களை பலிகொடுத்து, தங்கள் கொள்கைகளை நிலைநாட்டச் செய்வதாக உலக அரசியலில் கணிக்கப்படுகிறதாம்.
தமிழக முதல்வர் பிரதமர் பதவிக்கு வருவதை இலங்கை எதிர்க்கிறது. அதைக்கண்ட பா.ஜ.க., இலங்கைக்கு ஆதரவு தருகிறதாம். முலாயம்சிங் பிரதமராவதை சீனா, பாகிஸ்தான் கடுமையாக எதிர்க்கிறதாம். உலக நாடுகளுக்குத்தேவை இந்தியாவின் பிரதமர் தலையாட்டி பொம்மையாக இருக்கவேண்டும் என்பது. மேலும் இந்திய பொருளாதாரம் இத்தாலிக்கு அடித்துச் செல்லப்பட்டதாக இந்திய அதிகார வட்டங்கள் கிசுகிசுக்கின்றன.