மொபைல் சார்ஜர் வெடித்து விமானத்தில் தீ!

Filed under: உலகம் |

தைவான் நாட்டிலிருந்து புறப்பட தயாராக இருந்த விமானத்தில் போன் சார்ஜர் வெடித்து தீப்பற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் நாட்டில் டாவோயுவான் என்ற சர்வதேச விமான நிலையம் உள்ளது. இங்கிருந்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் டி.ஆர்.993 விமானத்தில் பயணிகள் அனைவரும் ஏறிய நிலையில், இந்த விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்தது. அப்போது, பயணிகள் இருக்கையில் அமர்ந்திருந்த பயணியின் செல்போன் சார்ஜர் திடீரென்று வெடித்தது. இதைப் பார்த்து அருகில் இருந்த பயணிகள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். விமான பணிப்பெண்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செல்போன் சார்ஜர் வைத்திருந்தவரும், அவர் அருகில் இருந்த 2 பேரும் காயமடைந்துள்ளனர். தற்போது, மூன்று பேரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த அசம்பாவித சம்பவத்திற்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமான நிலையம் சார்பில் பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுள்ளது.