மோடி மீண்டும் பிரதமராக எங்கள் கட்சி பாடுபடும்; தமிழருவி மணியன்

Filed under: அரசியல்,தமிழகம் |

காமராஜர் மக்கள் கட்சி தமிழருவி மணியன் பல்லடம் அருகே நடைபெறும் பாஜக பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் மோடி மீண்டும் பிரதமராக பாடுபடும் என்று அறிவித்துள்ளார்.

கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம், ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவால் தொடங்கப்பட்ட ‘என் மண் என் மக்கள்’ என்ற பாதயாத்திரை நிறைவு விழா திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் பிரமாண்டமாக நடந்தது. இதில் கலந்துகொள்ள இன்று பிரதமர் மோடி பல்லடம் வந்தடைந்தார். இப்பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பேசிய தமிழருவி மணியன், “மோடி மீண்டும் பிரதமராக காமராஜர் மக்கள் கட்சி பாடுபடும். தமிழ் நாட்டில் எங்கே பாஜக இருகிறது என்ற நிலைமை மாறி, எங்கும் இருக்கிறது என்ற நிலையுள்ளது. பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்பதற்காக ஒழுக்கமும் உண்மையுமான் சார்ந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களைக் கொண்ட காமராஜர் மக்கள் கட்சி பாடுபடும்” என்று தெரிவித்துள்ளார்.