‘யானை’ பட டிரெயிலர்!

Filed under: சினிமா |

ஜூன் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் நடிகர் அருண்விஜய் நடித்துள்ள “யானை” திரைப்படம். இப்படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

“யானை” படத்தின் டிரெயிலர் வரும் 30ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை அருண் விஜய் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதையடுத்தே இப்படத்தின் டிரையிலருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் உருவான இப்படத்தில் அருண் விஜய் ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் யோகிபாபு, பிரகாஷ்ராஜ், ராதிகா ஆகியோரும் நடித்துள்ளனர்.