ரத்தன் டாடா பயோபிக் இயக்குனர் யார்?

Filed under: சினிமா |

பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடாவின் பயோபிக் பாலிவுட்டில் உருவாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் சுதா கொங்கரா ரத்தன் டாடாவின் பயோபிக் படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் பரவியது. ரத்தன் டாடா கேரக்டரில் தமிழில் நடிகர் சூர்யாவும் இந்தியில் நடிகர் அபிஷேக்பச்சனும் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது. இப்படத்தை கேஜிஎப் தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கும் என சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது அந்த தகவல் உண்மையில்லை என சுதா கொங்கரா உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் இப்போது ரத்தன் டாடாவின் பயோபிக்கை எடுக்க பாலிவுட் பட நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த படத்தை 83 படத்தின் இயக்குனர் கபீர் கான் இயக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.