ராகுலுக்கு சிறைத்தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு!

Filed under: அரசியல்,இந்தியா |

இரண்டு ஆண்டுகள் ராகுல் காந்திக்கு சிறை தண்டனை வழங்கிய நீதிபதிக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூரத் நீதிமன்றத்தில் நடந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி வர்மா என்பவர் தீர்ப்பளித்தார். அவருடைய தீர்ப்பால் ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்ற நீதிபதியாக இருந்த வர்மா, தற்போது ராஜ்கோட் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு பெற்றுள்ளார். ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கிய நீதிபதிக்கு ஒரு சில நாட்களிலேயே பதவி உயர்வு கிடைத்துள்ளது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.