நடிகர் சிவகார்த்திகேயன் உலகநாயகன் கமலஹாசன் தயாரிப்பில் நடித்திருக்கும் படத்தின் ஷூட்டிங் எப்போது என்ற ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் பல வெற்றி படங்களை தயாரித்து உள்ளது. அவ்வகையில் சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தில் சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்களாக கேஜிஎப் உட்பட பல ஹிட் படங்களில் பணியாற்றிய அன்பறிவு இரட்டையர்கள் ஒப்பந்தமாகியுள்ளனர். இப்படத்தின் திரைக்கதைப் பணிகள் முடிந்துள்ள நிலையில் நவம்பர் மாதத்தில் இதன் ஷூட்டிங் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடக்கவுள்ளதாகவும், படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடிப்பதாகவும் கூறப்படுகிறது.