நடிகை ராஷ்மிகாவின் சினிமா வாழ்க்கை கன்னட சினிமாவில்தான் ஆரம்பம் ஆனது.
பன்மொழிப் படங்களிலும் நடித்து ஹிட் கொடுத்து முன்னணி நடிகையாக மாறியுள்ளார். ரசிகர்கள் செல்லமாக அவரை “நேஷனல் க்ரஷ்” என்று அழைகின்றனர். இதற்கிடையில் ராஷ்மிகா, பிரபல தெலுங்கு நடிகரான விஜய் தேவரகொண்டாவை காதலிப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தன. ஆனால் அதை இருவருமே மறுத்தனர். இருவரும் ஒன்றாக மாலத்தீவுகளுக்கு சுற்றுலா சென்றதாக தகவல்கள் பரவின. திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் ராஷ்மிகா, சினிமாவுக்கு வெளியேயும் சமூகவலைதளங்கள் மூலமாக ரசிகர்களோடு தொடர்பில் இருந்து வருகிறார். அவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவே அவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே உள்ளது. இப்போது ராஷ்மிகாவை 3 கோடியே 80 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். விரைவில் இந்த எண்ணிக்கை 4 கோடியை நெருங்கும் என சொல்லப்படுகிறது. இந்த சாதனையை படைக்கும் முதல் தென்னிந்திய நடிகையாக ராஷ்மிகா உருவாகியுள்ளார். இப்போது அவர் ஒரு பாடலுக்கு நடனமாடி வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.