“லப்பர் பந்து” ஷூட்டிங் தொடக்கம்!

Filed under: சினிமா |

வித்தியாசமான கதைக்களங்களில் நடித்துதான் படத்தை ஹிட் கொடுக்க வேண்டும் என்று வளர்ந்து வரும் நடிகர்கள் முயன்று வருகின்றனர்.

சமீபத்தில் இப்படி வெளியான “டாடா” திரைப்படம் ஹிட்டானது. இப்படி ஒரு படமாக உருவாகி வருகிறது ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் “லப்பர் பந்து” திரைப்படம். படத்தில் கதாநாயகிகளாக சுவாசிகா விஜய் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்குனர் அருண்ராஜா காமராஜின் இணை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இயக்குகிறார். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்தின் தலைப்பே இளைஞர்களை வெகுவாகக் கவரும் விதமாக வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் தற்போது ஷூட்டிங் தொடங்கியுள்ளது.