லோகேஷின் படம் விஜய்யால் தாமதமா?

Filed under: சினிமா |

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67வது படத்தை இயக்கவுள்ளார். இப்படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. ஜனவரி மாதம் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது.

ஜனவரி 2ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மேலும் தாமதமாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் விஜய், தற்போது குடும்பத்தோடு லண்டனுக்கு சென்றுள்ள நிலையில், அவர் ஜனவரி 3ம் தேதிதான் இந்தியா திரும்புகிறாராம். அதனால் அதன் பின்புதான் “வாரிசு” ஷூட்டிங் தொடங்கும் என கூறப்படுகிறது.