வரலாறு காணாத சரிவை சந்தித்தது இந்திய ரூபாயின் மதிப்பு!

Filed under: இந்தியா |

இந்திய ரூபாய் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிந்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு ஏற்படக்கூடும் பாதிப்புகள் ஏற்படும் குறித்து பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இன்று இந்திய ரூபாயின் மதிப்பு 82 ரூபாயை தாண்டி வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இன்றைய பங்குச்சந்தை முடிவின் போது இந்திய ரூபாயின் மதிப்பு என்பது 82.32 என வர்த்தகமானது. இந்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு காரணமாக இறக்குமதி செய்யப்படும் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக சமையல் எண்ணெய் கச்சா எண்ணெய் ஆகியவை விலை உயரும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஏற்றுமதி செய்பவர்களுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால் மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. அதேபோல் வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் தங்கள் குடும்பத்திற்கு பணம் அனுப்பும் போது அவர்களும் லாபம் அடைவார்கள்.