சூர்யா “வாடிவாசல்” திரைப்படத்தை பற்றிய அதிரடி முடிவை எடுத்துள்ளதாக திரைப்பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்துவதற்கு தாமதமாகும் என்று செய்தி வெளியாகி உள்ளது.
தற்போது பாலா இயக்கத்தில் ’சூர்யா 41’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் வெற்றிமாறன் தற்போது ‘விடுதலை’ படத்தில் பிஸியாக இருப்பதால் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமாகும் என தெரிகிறது. இதனை அடுத்து சூர்யா, ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் உடன் ஒரு திரைப்படத்தில் நடிக்க திட்டமிட்டு உள்ளதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று இந்த படம் ஒரு குறுகிய கால தயாரிப்பு என்றும் ஒரே மாதத்தில் இந்த திட்டத்தை முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.