“விக்ரம்“ வெற்றி பற்றி பேசிய ரஜினிகாந்த்!

Filed under: சினிமா |

“பொன்னியின் செல்வன்” டிரையிலர் விழாவில் நடிகர் கமல்ஹாசனின் சமீபத்தைய வெற்றிப்படமான “விக்ரம்” திரைப்படத்தைப்பற்றி ரஜினிகாந்த் பேசியுள்ளார்.

இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரையிலர் நேற்று ரிலீசானது. விழாவில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உட்பட ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேடையில் ரஜினி, கமல் மற்றும் இயக்குனர் மணிரத்னம் ஆகியோர் ஒன்றாக தோன்றி பேசினார்கள். விழாவில் கமல் பேசி முடித்ததும், ரஜினிகாந்த் பேச ஆரம்பித்ததும், “எல்லோருக்கும் நன்றி. முதலில் விக்ரம். (கமலைப் பார்த்து) கமல் சாரின் “விக்ரம்” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.” என்றார். ஜூன் மாதம் ரிலீசான “விக்ரம்“ திரைப்படம் தமிழ் சினிமாவில் இதுவரை அதிகமான வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளது. படம் பற்றி ஒட்டு மொத்த தமிழ் திரையுலகமும் பாராட்டித் தள்ளிவிட்ட நிலையில் ரஜினி இதுவரை எங்கேயும் அந்த படம் பற்றி பேசவில்லை. முதல் முறையாக இந்த மேடையில்தான் “விக்ரம்” திரைப்படம் பற்றி பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.