விஜய் கட்சியை கிண்டல் செய்த கிருஷ்ணசாமி!

Filed under: அரசியல்,தமிழகம் |

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அவரது இல்லத்தில் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம், “புதிய தமிழகம் கட்சியின் அரசியல் உயர்மட்ட குழுவினர் 130 பேர் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது கூட்டத்தில் பங்கேற்றவர்களிடம் 12 கேள்விகள் அடங்கிய படிவம் கொடுக்கப்பட்டது.தமிழக தேர்தல் கள நிலவரம் குறித்து எழுத்து பூர்வமாக பெறப்பட்டது. அத்துடன், தொடர்ந்து ஒவ்வொருவருடைய கள அனுபவம் குறித்து கேட்கப்பட்டது. வலுவான கூட்டணி என்றால் எண்ணிக்கையில், கொள்கை அடிப்படையில் இருக்க வேண்டும். அதிகபட்சம் 2-3 தொகுதிகள் கேட்பதாகவும், அகல கால் வைக்க விரும்பவில்லை. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி என சொல்வதற்கு இடமிருக்கா என்பது தெரியவில்லை. தற்போது அரசியலில் புதிய சூழல் உருவாகி உள்ளது, பாஜக மற்றும் அதிமுக கூட்டணி என்பது காலம் கடந்துவிட்டது. ஏப்ரல் மாதம் தான் தேர்தல் என்பதால் இன்னும் நேரம் உள்ளதால் கள ஆய்வு உள்ளிட்ட ஆய்வுகளுக்கு பின் முடிவெடுக்கப்படும். யாருடைய கூட்டணி என்று எந்த முடிவுக்கும் இதுவரை வரவில்லை. நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்தவுடன் உறக்கத்திற்கு சென்று விட்டார்கள், எழுந்திருக்கும் பொழுது அதைப் பற்றி பேசுவோம்” எனவும் பதிலளித்தார்.