விஜய் சம்பளத்தைக் குறைத்துக்கொண்டாரா?

Filed under: சினிமா |

இயக்குனர் லோகேஷ் அடுத்து இயக்கவிருக்கும் தளபதி 67 திரைப்பத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் “விக்ரம்” திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை லோகேஷ் இயக்கவுள்ளார். இத்திரைப்படமும் ஒரு மல்டிஸ்டார் படமாகவே உருவாக உள்ளது. படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்னர் தொடங்கியது. “மாஸ்டர்” திரைப்படத்தின் தாமதத்தால் தயாரிப்பாளர் லலித்குமாருக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக இந்த படத்தில் 10 கோடி ரூபாய் சம்பளத்தைக் குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.