விஜய் சேதுபதியின் படத்திலிருந்து சன் பிக்சர்ஸ் விலகியதா?

Filed under: சினிமா |

இயக்குனர் பொன்ராம் விஜய் சேதுபதி நடித்துள்ள 46வது திரைப்படத்தை இயக்கியுள்ளார். படத்தின் ரிலீஸ் டிசம்பர் மாதத்தில் இருக்குமென கூறப்படுகிறது. படத்தில் “சேதுபதி” மற்றும் “செக்க சிவந்த வானம்“ ஆகிய திரைப்படங்களுக்குப் பின்னர் விஜய் சேதுபதி மீண்டும் காவல்துறை அதிகாரியாக இப்படத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்திருக்கிறார்.

இப்படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் மூலமாக தயாரித்திருந்தது. ஆனால் படத்தின் முதல் லுக் போஸ்டரில் சன் பிக்சர்ஸ் பெயர் இடம்பெறவில்லை. இதற்கான காரணம் என்னவென்று இப்போது வெளியாகியுள்ளது. இனிமேல் நேரடியாக தாங்களே தயாரிக்கும் படத்துக்கு மட்டுமே சன் பிக்சர்ஸின் பெயர் இடம்பெற வேண்டும் என முடிவு செய்துள்ளதாம் சன் நிறுவனம். அதனால்தான் இந்தபடத்தில் சன் பிக்சர்ஸ் பெயர் இடம்பெறவில்லையாம்.