வில்லிசை பாட்டு கலைஞர் காலமானார்!

Filed under: சினிமா |

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல வில்லிசை பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் காலமானார்.

கடந்த 1928ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்த சுப்பு ஆறுமுகம் சிறுவயது முதலே வில்லுப்பாட்டு மீது அதிக ஆர்வம் கொண்டவர். கடந்த 40 ஆண்டுகளாக பல இடங்களில் வில்லுபட்டு கச்சேரியை நடத்தியவர் வயது முதிர்வு காரணமாக காலமானார். மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றவர். அவரது மறைவிற்கு அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சுப்பு ஆறுமுகம் பல திரைப்படங்களுக்கு நகைச்சுவை பகுதிகளை எழுதியுள்ளார். குறிப்பாக கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் நாகேஷ் உள்ளிட்ட பல்வேறு நகைச்சுவை கலைஞர்களுக்கு அவர் நகைச்சுவை பகுதிகளை எழுதியுள்ளார்.