விஷால் பட டீசரை வெளியிடும் விஜய்!

Filed under: சினிமா |

இன்று விஜய் மற்றும் விஷால் இருவரும் சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பின் பின்னணி என்னவாக இருக்கும் என்பதை அறிந்துக் கொள்ள இரு தரப்பு ரசிகர்களுக்கும் ஆர்வம் அதிகமாகி உள்ளது.

விஷால் நடித்துள்ள “மார்க் ஆண்டனி” திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாக இருந்த நிலையில் இந்த டீசரை விஜய்யிடம் காண்பித்து விஷால் உட்பட “மார்க் ஆண்டனி” படக்குழுவினர் வாழ்த்து பெற்றனர். இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் விஜய்க்காக இரண்டு கதைகளை வைத்துள்ளதாகவும், அது சம்மந்தமாகவும் விஷால் விஜய்யிடம் பேசியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் “மார்க் ஆண்டனி” திரைப்பட டீசரை விஜய் வெளியிட உள்ளதாகவும், அதற்காகவே சந்திப்பு நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்துவது போல விஷால் தன்னுடைய டிவிட்டரில் “thalapathyvijayformarkantony” என்ற ஹேஷ்டேக்கை பகிர, விஜய் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.