வெற்றிக்கு உதவியவர்களுக்கு நன்றி கூறிய சூர்யா!

Filed under: சினிமா |

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி கார்த்தி நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற “விருமன்” திரைப்படத்தின் விளம்பர பப்ளிசிட்டிக்கு பணியாற்றியவர்களுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்துள்ளார்.

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள “விருமன்” திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி தேதி ரிலீசானது. இத்திரைப்படத்தில் கார்த்தியோடு அதிதி ஷங்கர், ராஜ்கிரண் மற்றும் பிரகாஷ் ராஜ் உட்பட ஏராளமானவர்கள் நடித்துள்ளனர். படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சூர்யா தயாரிப்பில், கார்த்தி நடிப்பில் உருவாகி வெற்றிபெற்றுள்ள இரண்டாவது படம் இது. அடுத்தும், சூர்யா- கார்த்தி- முத்தையா கூட்டணியில் ஒரு படம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், “விருமன்” படம் வெற்றி பெற விளம்பர பப்ளிசிட்டி செய்ய பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்து, நடிகர் சூர்யா டுவிட்டரில், “போஸ்டர் பப்ளிசிட்டி நந்தகுமார், பேப்பர் விளம்பரம் முபாரக் ஆகிய இருவருக்கும் நன்றி” என்று பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் சூர்யா.