வெற்றிமாறன் இயக்கத்தில் விரைவில் நடிகர் விஜய் நடிப்பாரா?

Filed under: சினிமா |

“விடுதலை 2” திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். அதையடுத்து அவர் சூர்யா நடிப்பில் “வாடிவாசல்” படத்தை இயக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதையடுத்து அவர் இயக்கத்தில் “வடசென்னை 2,” கமல்ஹாசனுக்கு ஒரு படம் என பிஸியாகவுள்ளார்.

இதற்கிடையில் அவர் நடிகர் விஜய்க்கும் கதை சொல்லி சம்மதம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இப்போது விஜய்யின் மேலாளர் ஜெகதீஷ் அடிக்கடி வெற்றிமாறனை சென்று சந்தித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதனால் விஜய்- வெற்றிமாறன் படம் எதிர்பார்த்ததை விட சீக்கிரமாகவே தொடங்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் சில படங்களில் நடித்துவிட்டு விரைவில் அரசியலுக்கு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.