வெற்றிமாறன் படத்தின் அப்டேட்!

Filed under: சினிமா |

வெற்றிமாறன் இயக்கி வரும் அடுத்த திரைப்படம் “விடுதலை.” இப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதையின் நாயகனாக அவதாரமெடுக்கிறார். இத்திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். மற்றுமொரு கதாபாத்திரத்தில் இயக்குனரும் நடிகருமான கௌதம் மேனன் மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர். இதையடுத்து இப்போது படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதிகளில் நடந்து வருகிறது. இப்படம் சம்மந்தமாக ஏராளமான காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாம். இரண்டு பாகங்களையும் படமாக்கி முடித்துவிட்டு குறுகிய கால இடைவெளியில் அடுத்தடுத்து இந்த படங்களை ரிலீஸ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உ