வெளிநாடுகளில் ஷூட்டிங் நடத்து புஷ்பா படக்குழுவினர்!

Filed under: சினிமா |

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதி சுகுமார் இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான திரைப்படம் “புஷ்பா”.

இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. படத்தில் ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பு பெற்றது. குறிப்பாக பாலிவுட்டில் இந்த படத்தின் வெற்றி பெரியளவில் பேசப்பட்டது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து இரண்டாம் பாகமான புஷ்பா தி ரைஸ் படத்துக்கான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. “புஷ்பா 2” கதைக்களம் வெளிநாடுகளில் நடப்பது போல அமைக்கப்பட்டுள்ளதாம். இதையடுத்து தற்போது இரண்டாம் பாகத்தின் கிளிம்ப்ஸ் மற்றும் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரில் அல்லு அர்ஜுன் போல சேலை அணிந்து மேக்கப் எல்லாம் போட்டு முரட்டு உருவமாக காணப்பட்டார். இப்போது அடுத்த கட்ட ஷூட்டிங் இலங்கை மற்றும் மலேசியா உள்ளிட்ட பகுதிகளில் நடக்கவுள்ளதாம். அங்கு வெளிநாட்டைச் சேர்ந்தவர்களோடு அல்லு அர்ஜுன் மோதும் ஆக்‌ஷன் காட்சிகளைப் படமாக்கவுள்ளாராம்.