வெளிநாட்டில் நடக்கும் பட இசை வெளியீடு!

Filed under: சினிமா |

கடந்த 2013ம் ஆண்டு கதிர், ஓவியா நடிப்பில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கிய ‘மதயானைக்கூட்டம்‘ திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

“மதயானைக் கூட்டம்” திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆன நிலையில் இயக்குனர் விக்ரம் சுகுமாறன் தனது அடுத்த படத்தை முடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு ‘இராவண கோட்டம்‘ என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. படத்தின் நாயகனாக இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தனு நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் இசை வெளியீடு விரைவில் துபாயில் நடக்கப் போவதாக சொல்லப்படுகிறது. சினிமாவில் 15 ஆண்டுகளுக்கு மேலாக இருந்தாலும் சாந்தனுவால் இன்னும் ஒரு பெயர் சொல்லும் வெற்றியைப் பெற முடியவில்லை. இத்திரைப்படத்தை பெரிதும் நம்பி அவர் கடின உழைப்பை செலுத்தி இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் படத்துக்கு நல்ல பப்ளிசிட்டியாக இந்த இசை வெளியீடு அமையும் என சொல்லப்படுகிறது.