ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் படத்தின் டைட்டில்!

Filed under: சினிமா |

நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஆகியும் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் இன்னும் ரிலீஸாகவில்லை.

படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இயக்குனர் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “ஆர்சி 5” படத்தையும் இயக்கி வருகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பாதி அளவுக்கு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்று ராம்சரணின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் ‘கேம் சேஞ்சர்’ என்ற டைட்டில் வெளியிடப்பட்டுள்ளது.