ஷாருக்கானின் பங்களாவில் பதுங்கிய இளைஞர்கள் யார்?

Filed under: சினிமா |

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பங்காவில் நுழைந்து பதுங்கியிருந்த இளைஞர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

ஷாருக்கான், ஜான் ஆபிரகாம், தீபிகா படுகோன் நடிப்பில், ஜனவரி மாதம் தேதி வெளியான படம் “பதான்.” இத்திரைப்படம் உலகம் முழுதும் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து, தொடர்ந்து தோல்வியடைந்த வந்த பாலிவுட் சினிமாவுக்கு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மும்பையிலுள்ள ஷாருக்கானின் மன்னத் என்ற பிரம்மாண்ட பங்களாவின் 3-வது மாடியிலுள்ள அவரது மேக்கப் அறைக்குள் அனுமதியின்றி நுழைந்து 2 இளைஞர்கள் பதுங்கியிருந்தனர். இதுபற்றி, ஷாருக்கானின் மேலாளர் கல்லீன் டிசோசா புகாரளித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் 2 இளைஞர்களைக் கைது செய்தனர். அந்த இளைஞர்கள், இருவரும் சுவர் தாண்டி, பங்களாவுக்குள் குதித்து, அதிகாலை 3 மணிக்கு 3வது தளத்திற்குச் சென்று காலை 10:30 மணி வரை காத்திருந்துள்ளனர் என்று மேலாளர் போலீசில் கூறியுள்ளார். 2 இளைஞர்களைப் பார்த்து ஷாருக்கான் அதிர்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பங்களாவில் இருந்து அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.