ஸ்டாலின் தொடங்கி வைத்த ராகுலின் பயணம்!

Filed under: அரசியல் |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தை தொடங்கி வைத்தார்.

இன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் நோக்கி நடை பயணத்தை தொடங்கவிருக்கும் நிலையில் இந்த நடைபயணத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். நடைப்பயண தொடக்க விழாவில் தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி இப்பயணம் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தனது 150 நாட்கள் பாத யாத்திரையை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.