அதிர்ஷ்ட தேவதை ஹன்சிகா

Filed under: சினிமா |

_OY_0128ஹன்சிகாவை ஒரு அதிர்ஷ்ட தேவதை என திரை உலக வல்லுனர்கள் கூற ஆரம்பித்ததாக வந்த செய்தியின் பிண்ணனியில் இந்த வருடம் வெளி வந்து பெரும் வெற்றி பெற்ற இரு படங்களில் [ தீயா வேலை செய்யணும் குமாரு ,சிங்கம் 2 ] அவர் நாயகியாக நடித்து தான் என கூறபடுகிறது . இந்த புதிய பட்டதை பற்றி ஹன்சிகாவை விசாரித்த போது ‘ இதை வெறும் அதிர்ஷ்டம் என கூற முடியாது , என்னை பொறுத்த வரை அதிர்ஷ்டம் என்பது வாய்ப்பு வரும் போது அதை இரண்டு கைகளாலும் பற்றி கொள்ள தயார் நிலையில் இருப்பதுதான் . ஒரு professional நடிகையாக மழை வெயில் என பாராமல் உழைப்பதும் , இரவு பகல் என தூக்கமின்றி உழைப்பதும் ,நல்ல கதை , நல்ல தயாரிப்பு நிறுவனம் , நல்ல இயக்குனர் என தேர்ந்து எடுப்பதும் , என் பல பலவீனத்தை உணர்ந்து நடிப்பது என என் கடமையை ஆற்றுகிறேன் .இதற்கும் மேலாக என் தாயின் அறிவுரையும் , ஊக்கமும் என் வெற்றியை உறுதி செய்கிறது . இதை எல்லாவற்றையும் விட நான் தத்து எடுக்கும் குழந்தைகளின் மூலம் எனக்கு கிடைக்கும் ஆசியும் எனக்கு இந்த பட்டதை அளித்து இருக்கலாம் ‘ என புன்னகையோடு கூறுகிறார் ஹன்சிகா.

PHOTOS