ஹரி படத்தில் இணைந்த பிரபல இசையமைப்பாளர்!

Filed under: சினிமா |

நடிகர் விஷால் நடிப்பில் “மார்க் ஆண்டனி” படத்தில் நடித்துள்ளார். இப்படம் ஆயுத பூஜைக்கு ரிலீசாகவுள்ளது.

விஷாலின் 34வது படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை இயக்குநர் ஹரி இயக்கவுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் இருவரின் காம்பினேசனில் உருவான “தாமிரபரணி” படத்தை அடுத்து, ஹரி இயக்கத்தில் கடந்த 2014ம் ஆண்டு விஷால், ஸ்ருதிஹாசன், ராதிகா சரத்குமார், சத்யராஜ் முகேஷ் திவாரி ஆகியோரின் நடிப்பில் வெளியானது “பூஜை” படம். அதன் பிறகு விஷால் 34 திரைப்படத்திற்கு இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு டிஎஸ்பி எனும் தேவிஸ்ரீபிரசாத் இசையமைவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.