ஹாலிவுட்டில் தனுஷூக்கு அங்கீகாரம்!

Filed under: சினிமா |

“கிரே மேன்” திரைப்படம் விரைவில் தனுஷ் நடிப்பில் வெளிவர இருக்கிறது.

“தி கிரே மேன்” என்ற திரைப்படத்தில் நடிக்கவுள்ள நான்கு முக்கிய நட்சத்திரங்களில் தனுஷும் ஒருவர் என்ற அறிவிப்பு வெளிவந்ததுள்ளது. இத்திரைப்படம் அவெஞ்சர்ஸ் இயக்குனர்களுடையது.

“இத்திரைப்படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ் நடிக்கிறார்” எழுத்தாளர் மார்க் கிரேனி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஜூன் 22ம் தேதி அத்திரைப்படம் ரிலீசாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் தொடர்பான ஸ்டைலான புகைப்படமும் வெளியானது. இத்திரைப்படத்துக்காக தனி எமோஜியை தற்போது டிவிட்டர் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.