சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் சுங்கச்சாவடி தடுப்புகளை இடித்துச் சென்ற வாகனங்களின் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
முதலமைச்சர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான பாஜக ஆட்சி உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டாவது முறையாக பாஜக தொடர்ந்து பாஜக ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். ஆக்ராவில் டிராக்டரில் மணல் நடத்தி வந்த கொள்ளையர்கள் அங்குள்ள சுங்கச்சாவடியில் இருந்த தடுப்புகளை தகர்த்துவிட்டு, சென்றுள்ளனர். இதைப் பார்த்த சுங்கச்சாவடி ஊழியர்கள் செய்வறியாமல் திகைத்து நின்றனர். இந்த வீடியோ அங்குள்ள சிசிடிவி காட்சிகளில் பதிவாகியிருந்த நிலையில், இதை தற்போது, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதவிட்டுள்ளார்.