பிரபல நிறுவனம் ஒன்று அடுத்தடுத்த அஜீத் திரைப்படங்களை தயாரிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஹெச்.வினோத், போனிகபூர், தொடர்ந்து 3வது முறையாக கூட்டணி அமைத்துள்ள இப்படத்தின் தலைப்பு துணிவு என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் போஸ்டர்கள் வெளியானது. அதனைத்தொடர்ந்து, முழுவீச்சில் படப்பிடிப்புகள் நடந்துக் கொண்டுள்ளது. இன்றுடன் “துணிவு” திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. “துணிவு” படத்தின் போஸ்ட் புரொடெக்சன் மற்றும் ரீ ரிக்கார்டிங் பணிகள் தொடங்கடப்படவுள்ளது. தற்போது அஜித் 61 படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும், இப்படத்தை லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியானது. இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்த 2 படங்கள் என மொத்தம் 3 படங்கள் லைகா புரொடெக்சனில் அஜீத் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.