இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன் “நேரம்,” “பிரேமம்“ மற்றும் “கோல்ட்” ஆகிய திரைப்படங்களை இயக்கியவர்.இவர் நடன இயக்குனர் சாண்டியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரிக்கிறார். படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். ஆனால் இத்திரைப்படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.
தனக்கு ஆட்டிசம் தொடர்புடைய பிரச்சனை இருப்பதாக இயக்குனர் அல்போன்ஸ் அறிவித்திருந்தார். இதன் காரணமாக அவர் இனிமேல் திரைப்படங்கள் இயக்கப் போவதில்லை எனவும் கூறினார். இப்போது அவர் அஜீத்குமார் சம்மந்தமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் “இது அஜித் சாருக்கான பதிவு. நான் நிவின் பாலி மற்றும் சுரேஷ் சந்திரா மூலமாக நீங்கள் அரசியலுக்கு வரப்போவதாக அறிந்தேன். இது “பிரேமம்“ படத்துக்குப் பிறகு நீங்கள் நிவின் பாலியை உங்கள் வீட்டுக்கு அழைத்து பேசியதற்கு பிறகு நடந்தது. ஆனால் அதன் பிறகு உங்களை நான் பொது மற்றும் அரசியல் நிகழ்ச்சிகளில் பார்க்கவே இல்லை. ஒன்று அவர்கள் என்னிடம் பொய் சொல்லியிருக்க வேண்டும். இல்லையென்றால் நீங்கள் அதை மறந்திருக்க வேண்டும் அல்லது உங்களுக்கு எதிராக யாராவது செயல்பட்டிருக்க வேண்டும். இம்மூன்றும் இல்லை என்றால் நீங்கள் ஒரு கடிதம் மூலம் விளக்கமளிக்க வேண்டும். ஏனென்றால் நான் உங்களை நம்புகிறேன். அதுபோல பொதுமக்களும் உங்களை நம்புகிறார்கள்” எனக் கூறி பீதியை கிளப்பியுள்ளார்.