அஜீத் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Filed under: சினிமா |

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜீத் நடிப்பில் “துணிவு” திரைப்படம் ரீலீசாவது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

“துணிவு” திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. ஆனால் திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாத நிலையில் ரசிகர்கள் குழப்ப நிலையில் இருந்தனர். ஒரு சிலர் “துணிவு” திரைப்படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகுமென்றும், சிலர் ஜனவரி 12ம் தேதி வெளியாகுமென்றும் கூறி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சற்று முன்னர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில், “துணிவு” திரைப்படம் ஜனவரி 11ம் தேதி ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதையடுத்து அஜீத் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். “துணிவு” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டதால் “வாரிசு” திரைப்படத்தின் ரிலீஸ் தேதியும் மாற்றப்படுமா? என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.