நடிகர் அஜீத் தமிழில் அறிமுகமான முதல் படம் “அமராவதி.” “பிரேம புஸ்தகம்“ படத்தின் ரீமேக் ஆகும்.
இத்திரைப்படத்தில் அஜீத், அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் சங்கவியுடன் நடித்திருந்தார். இந்த படத்தை செல்வா இயக்க, சோழா பொன்னுரங்கம் தயாரித்திருந்தார். இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாக அமைந்தன. வரும் மே 1ம் தேதி அசுத்குமாரின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் முதல் படமான “அமராவதி” திரைப்படத்தை டிஜிட்டல் மயமாக்கி ரீ&ரிலீஸ் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சோழா பொன்னுரங்கம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.