நடிகர் அஜீத்குமாரின் உலகச் சுற்றுப் பயணம் குறித்து அவரது மேனேஜர் சுரேஷ் சந்திரா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
நடிகர் அஜீத்குமார், ஹெச். வினோத்குமார் இயக்கத்தில் “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். படம் பொங்கலுக்கு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு, இதற்கான புரமோசன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. இப்படத்தின் ஷூட்டிங்கின் போது, இடையிடையே தன் உலகச் சுற்றுப் பயணத்தின் முதல் பகுதியாக இந்தியா முழுவதும் அஜீத்குமார் பைக்கில் பயணம் மேற்கொண்டார். அவரது பயணம் பைக் ரைடர்களுக்கும் சாகச விரும்பிகளுக்கும் உற்சாகம் ஊட்டியது. இதனால், ரசிகர்களும் மகிழ்ச்சியடைந்து, அஜீத்தின் புகைப்படங்களை டிரெண்டிங் ஆக்கினர். உலகச் சுற்றுப் பயணத்தின் முதல் பகுதியை இந்தியா முழுவதிலுள்ள அனைத்து மாநிலங்கள், பகுதிகளிலும் பைக்கினால் சுற்றி சாகசப் பயணம் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். இதுகுறித்து நடிகர் அஜீத்தின் மேனேஜர் தனது டுவிட்டர் பக்கத்தில், “உலகச் சுற்றுப் பயணதின் லெக்-1ஐ அஜீத்குமார் இந்தியாவில் அனைத்து மாநிலங்களில் பைக் சவாரியை நிறைவு செய்துள்ளார். இந்தியாவில் எப்பகுதிக்குச் சென்றாலும் அவருக்கு கிடைத்த அன்பைக் கருத்தில் கொண்டால் அது ஒரு சாதனை” என்று பதிவிட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அஜீத்குமார் ஒரு ஆட்டோவில் பயணம் செய்யும் வீடியோ ஒன்று ரசிகர்களால் பகிரப்பட்டு தற்போது வைரலாகி உள்ளது.