அஜீத் ரசிகர்கள் பழனிக்கு பாதயாத்திரை!

Filed under: சினிமா |

நடிகர் அஜீத்தின் ரசிகர்கள் “துணிவு” திரைப்படம் வெற்றி பெறுவதற்காக பழனிக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர்.

எச்.வினோத் இயக்கத்தில், அஜீத் நடிப்பில் உருவாயுள்ள திரைப்படம் “துணிவு.” அஜீத்தின் “துணிவு” பட டிரைலர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிரெயிலர் துபாயின் புர்ஜ் கலீபா, மற்றும் டைம் சதுக்கத்திலும் வெளியாக உள்ளது. இதனிடையே துணிவு படம் வெற்றி பெற வேண்டி அஜீத் ரசிகர்கள் 30 பேர் பழனிக்கு பாதயாத்திரை சென்றுள்ளனர். மதுரை மாவட்டம் பரவை தேசிய நாயகன் அஜீத் குமார் ரசிகர் மன்றத்தினர் பழனிக்கு பாதயாத்திரை சென்றனர்.