இரண்டு ஆண்டுகளாக அஜீத் நடித்த “விடாமுயற்சி” படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் ரிலீஸ் தேதியை சமீபத்தில் அளித்த பேட்டியில் அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா உறுதி செய்துள்ளார்.
மகிழ்திருமேனி இயக்கத்தில், அஜீத் நடிப்பில், அனிருத் இசையில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக்கி வரும் திரைப்படம் “விடாமுயற்சி.” திரிஷா மற்றும் ரெஜினா கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்தில் படப்பிடிப்பு 80 சதவீதம் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, “படம் தீபாவளிக்கு ரிலீஸ் செய்வது உறுதி. இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழுவினர் அஜர்பைஜான் சென்று விட்டனர்” என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே “விடாமுயற்சி” திரைப்படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என்று கூறப்பட்டிருந்தது. தற்போது சுரேஷ் சந்திரா அதை உறுதி செய்துள்ளதால் அஜீத் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.