அஜீத் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிப்பு!

Filed under: சினிமா |

நடிகர் அஜீத் சென்னை ஈஞ்சம்பாக்கம் பகுதியில் வசிக்கிறார். அந்த பகுதியில் சாலை விரிவாக்க மற்றும் மழை நீர் வடிகால் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், நடிகர் அஜீத் வீட்டு காம்பவுண்ட் சுவர் இடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.

அந்த பணிக்காக அஜீத் வீட்டின் காம்பவுண்ட் சுவர் இன்று காலை இடிக்கப்பட்டது. இந்த பணிகள் மூலம், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும் மற்றும் மழை நீர் வடிகால் வசதி மேம்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜீத் வீட்டின் காம்பவுண்ட் சுவர் மட்டுமின்றி அந்த பகுதியிலுள்ள பல வீடுகளின் காம்பவுண்ட் சுவர்களும் இடிக்கப்பட்டுள்ளன.