அடுத்த மூன்று நாட்களுக்கு மிக அதிக கனமழை பெய்யும்… எந்தெந்த பகுதிகளில் தெரியுமா?

Filed under: தமிழகம் |

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. டிசம்பர் மாதம் முடிந்திருக்க வேண்டிய வடகிழக்கு பருவமழை ஜனவரி 15 வரை தொடரும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வளிமண்டல சுழற்சி காரணமாக, நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்யும் என்று கணித்துள்ளது.

ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் காரைக்கால், மாஹே, புதுச்சேரி, தமிழ்நாட்டில பரவலாக மழை பெய்யும். அதற்கு அடுத்து வரும் 3 நாட்களில் மழைப் பொழிவு படிப்படியாக குறையும்..” என்று தெரிவித்துள்ளது.

அடுத்த 2 நாட்களுக்கு, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளுக்கு மீன் பிடிக்க மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாகப்பட்டினம், பேராவூரணி, திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் அதிகபட்ச மழை பதிவாகி உள்ளது. 14-ம் தேதி வரை, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.