பெரியகுளம் அருகே அண்ணன் மனைவியை அறிவாளால் வெட்டி கொலை செய்த நபர். சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை செய்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பாரதியார் தெருவைச் சேர்ந்த ராஜூ (55) என்பவர்,அவரது அண்ணன் வெள்ளைச்சாமியின் மனைவி ராமுத்தாய் என்பவரை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். பெரியகுளம் தென்கரை காவல்துறையினர் இடத்தகராறு காரணமாக மின்சார இணைப்பு பெயர் மாற்றுவது சம்பந்தமாக அண்ணன் வெள்ளைச்சாமியின் பேரில் இருக்கும் மின்சார இணைப்பை ராஜு பெயருக்கு மாற்றி தரவில்லை எனக்கூறி இன்று தென்னந்தோப்பிற்கு சென்றபோது அண்ணன் மனைவி ராமுத்தாயை கையில் இருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் ராமுத்தாய் சம்பவ இடத்தில் பலியானார்.தென்கரை காவல்துறையினர் விசாரணை செய்தனர். இதையடுத்து குற்றவாளி சரணடைந்துள்ளார்.