இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நாங்கள் அடக்கி வாசிப்பதால் தான் அண்ணாமலையால் பேச முடிகிறது என தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரதமர் மோடி தமிழ்நாடு குறித்து விமர்சனம் செய்த போது தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று கூறியதற்கு இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர், “தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால்தான் பிரதமர் மோடி அடிக்கடி இங்கு வந்து போக முடிகிறது, அண்ணாமலையும் வாய்க்கு வந்தபடி பேச முடிகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எங்களை அடக்கி வாசிக்க சொன்னதால்தான் நாங்கள் அமைதியாக இருந்து கொண்டிருக்கின்றோம். அதனால் தான் அண்ணாமலையால் தனது வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு. இந்த பதிலுக்கு அண்ணாமலை என்ன பதிலடி கொடுக்க போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.